வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் அத்திகோவில் பகுதியில் கனமழையால் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்குள்ள கருப்பசாமி கோவிலுக்குச் செல்லும் பக்தர்களும், விவசாயிகளும் ஆற்றைக் கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். தற்காலிக இரும்புப் பாலம் பழுதடைந்துள்ளதால், ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட புதிய பாலப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு- கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிக்கித்தவிப்பு
