தமிழகம் முழுவதும் சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நெல்லையில் வரலாறு காணாத வகையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.168 வரை விற்பனையாகிறது. இதேபோல் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்ட பல்லாரி வெங்காயத்தின் விலையும் ரூ.80 வரை உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் சின்ன வெங்காயம் விலை கிடு கிடு உயர்வு
