Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

3 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை – பொதுமக்கள் சாலை மறியல்!

3 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லை – பொதுமக்கள் சாலை மறியல்!

கரூர் அருகே நெரூர் வடபாகம் கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் கிராமத்திற்கு உட்பட்ட நெரூர், கிருஷ்ணன் கோயில் தெரு

மற்றும் மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்று ஆர்.சி. தெரு அருகே நெரூர் – கரூர் சாலையில் முள் செடிகளை வெட்டிப் போட்டு மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாங்கல் காவல் ஆய்வாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலு ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இன்று மாலைக்குள் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் நெரூர் – கரூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!