திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையால், 2,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் நெல் உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விளைநிலங்களில் தேங்கியுள்ள மழைநீரால் பயிர்கள் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின் தற்போதைய நிலவரத்தை அறியும் வகையில், நீரில் மூழ்கிய பகுதிகள் ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ஸ்ரீரங்கத்தில் கனமழையால் 2,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
