பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அதி வேகமாக சென்ற தனியார் கல்லூரி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் காயம் அடைந்தனர்.
பெருமத்தூர், கிளியூர்,கிளப்புலியூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக அரும்மடல்-கில்வாடி சாலையில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் பேருந்து சென்று கொண்டு இருந்த பொது, டிரைவர் செல்போன் பேசிக்கொண்டே பஸ்சை இயக்கியதாக கூறப்படுகிறது.அப்போது கட்டுப்பாடை இழந்த பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதை அடுத்து மாணவர்கள் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து வெளியேறினார்.
காயம் அடைந்தவர்கள் மற்றொரு கல்லூரி பஸ்சில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர், விபத்தை தொடர்ந்து டிரைவர் விஜய் தப்பி ஒட்டியதாக கூறப்படும் நிலையில், மருவத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
