தஞ்சாவூர் மாவட்டம், கரும்புக்கு வழங்க வேண்டிய சிறப்பு ஊக்கத்தொகை 709 தீபாவளிக்கு முன்னதாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்.
தமிழக அரசு கரும்புக்கான ஊக்கத்தொகையாக 709 ரூபாய் சமீபத்தில் உயர்த்தி அறிவித்த நிலையில் அது விவசாயிகளுக்கு தற்போது வரை வழங்கப்படாமல் உள்ளது. ஆனால் தமிழக அரசு இந்த ஊக்கத்தொகையினை வருகின்ற ஜனவரி பதினெட்டாம் தேதிக்குள்ளாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனை விரைந்து தீபாவளிக்கு உள்ளாக வழங்க வேண்டும் இல்லை என்றால் கருப்பு தீபாவளியாக கொண்டாடப் போவதாகவும் மேலும் சர்க்கரை விலை 90 ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில் இரண்டு மடங்காக விலை உயர்ந்துள்ளது உயர்த்தப்பட்ட அளவிற்கு கரும்பு விவசாயிகளுக்கு வழங்குவது கிடையாது தன் ஒன்றிற்கு ஐந்தாயிரம் ரூபாய் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
