தமிழகத்தில் காலியாக உள்ள 11 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதற்காக தேடுதல் குழுக்கள் அமைக்கப்படவுள்ள நிலையில், அக்குழுவில் UGC பிரதிநிதி தேவையில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரி பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணி மூப்பு தொடர்பான நடைமுறைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், 2,700 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் 27,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அவர் இன்று பேட்டியளித்தார்.
யுஜிசி பிரதிநிதி தேவையில்லை: அமைச்சர் விஸ்வநாதன்
