Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கே.பி.ஆர் கல்லூரி உலக சாதனை விழா – 3 புதிய சாதனைகள் பதிவு!

கே.பி.ஆர் கல்லூரி உலக சாதனை விழா – 3 புதிய சாதனைகள் பதிவு!

கோவை, கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் 7 ஆண்டுகால கல்விப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், கேபிஆர் கலை அறிவியல் கல்லூரி
உலக சாதனைத் திருவிழா 2027 பிரம்மாண்டமாக நடைபெற்றது. கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இணைந்து மூன்று புதிய உலக சாதனைகளை வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளனர்.
இச்சாதனைத் திருவிழாவானது கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் டாக்டர் கே.பி. ராமசாமி அவர்களின் தலைமையிலும், கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் ஆலோசனையிலும், கல்லூரி முதல்வர் பி. கீதா வழிகாட்டலிலும்

ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்படுகிறது,
முதலாவது சாதனையாக 200 கி.மீ தொடர் ஓட்டம் நடைபெற்றது.
போதைக்கு வேண்டாம் சொல்வோம், விளையாட்டுக்கு ஆம் சொல்வோம் என்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு முழக்கத்தை முன்னிறுத்தி, அக். 24 அன்று விளையாட்டு சாதனை அரங்கேறியது. இதில் விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை மற்றும் கல்லூரி மாணவர்கள் என மொத்தம் 464 பேர் இணைந்து, 200 கிலோமீட்டர் தொடர் ஓட்டத்தை 11 மணி நேரம் 28 நிமிடங்களில் ஓடி முடித்து புதிய உலக சாதனை படைத்தனர்.

இரண்டாவது சாதனையாக ஒரே நேரத்தில் 655 நூல்கள் வெளியிடப்பட்டது.
ஓர் உயர்கல்வி நிறுவனம் சார்பில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையி’லான நூல்களைத் தொகுத்து எழுதி வெளியிடும் சாதனை முயற்சியில் 27 துறைகளைச் சார்ந்த 864 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். முதல்வர் தலைமையிலான புல முதன்மையர்கள் குழு 699 நூல்களைத் தேர்வு செய்தது.
பின்னர், நான்கு மாநிலங்களைச் சேர்ந்த 21 சாதனைத் தீர்ப்பாளர்கள் முன்னிலையில் தனிநபர் நேர்காணல்கள், கருத்துத்த_ ஆய்வு மற்றும் ஐஸ்பிஎன் ஒதுக்கீட்டு ஆவண சரிபார்க்கப்பட்டு, 655 நூல்கள் உலக சாதனைக்கான தகுதியைப் பெற்றன. இந்த நூல்களைக் கல்லூரி நிர்வாகமே பதிப்பாளராக இருந்து மின்வணிகத் தளங்கள் வழியாக விற்பனைக்குக் கொண்டுவரவுள்ளது.

மூன்றாவது சாதனையாக, 1.26 லட்சம் விதைப் பந்துகள் தயாரித்து புதிய சாதனை செய்யப்பட்டது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில், ஒரே குழுவினரால் 2 மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான விதைப் பந்துகள் உருவாக்கும் முயற்சி அக். 26 நடைபெற்றது. இதில் 1,022-க்கும் மேற்பட்ட கல்லூரிப் பங்கேற்பாளர்கள் மற்றும் 464 நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்கள் இணைந்து 1,26,000 விதைப் பந்துகளை உருவாக்கி சாதனை இலக்கை எட்டினர்.
இச்சாதனைகளுகு ‘எலைட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’, ‘ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ மற்றும் ‘இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய சர்வதேச மற்றும் தேசிய அமைப்புகள் சான்றளித்தனர். முதல் கட்டமாக 3 சாதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 2027 ஜனவரியில் இரண்டாம் கட்டமாக மேலும் 9 சாதனைகள் படைக்கப்பட உள்ளதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!