திருப்பத்தூர் அருகே மின்கசிவால் குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சுண்ணாம்புக்காளை பகுதியைச் சேர்ந்த சுரேந்தர் மகன் ராமசந்திரன் என்பவர் குடும்பத்தினருடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது வீட்டில் திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக குடிசை வீடு தீ பற்றி

எரிந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறிது நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
