Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 11 பவுன் நகை திருட்டு – போலீசார் விசாரணை!

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 11 பவுன் நகை திருட்டு – போலீசார் விசாரணை!

குலசேகரன்பட்டினத்தில் அரசுப் பேருந்தில் பயணித்தபோது, பெண்ணின் கைப்பையிலிருந்த 11½ பவுன் நகைகளை திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த பெண் குலசேகரன்பட்டினத்தில் அரசுப் பேருந்தில் பயணித்தபோது, அவரது கைப்பையிலிருந்த 11½ பவுன் நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். செல்போனில் பேசிய கவனச்சிதறலைப் பயன்படுத்தி நகைகள் திருடப்பட்ட நிலையில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குலசேகரன்பட்டினம், அக்டோபர் 30:

மதுரை பரவை ஊராட்சிக்குட்பட்ட கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் மணி. டைல்ஸ் வியாபாரி. இவரது மனைவி பஞ்சவர்ணம் (49). இவர்களது மகள் காயத்ரியின் 2 மகள்களுக்கு நெல்லை மாவட்டம் உவரி கோவிலில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி காதுகுத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காகக் குடும்பத்தினருடன் பஞ்சவர்ணம் வந்திருந்தார்.

காதுகுத்து நிகழ்ச்சி முடிந்த பின்பு, அவரிடம் 10½ பவுன் தங்கச் சங்கிலிகள், 1 பவுன் எடைகொண்ட 2 மோதிரங்கள் என மொத்தம் 11½ பவுன் நகைகளை ஒரு பர்ஸில் போட்டு குடும்பத்தினர் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குலசேகரன்பட்டினம் பகுதியில் பஞ்சவர்ணம் அரசுப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது, அவரது மகள் செல்போனில் அழைத்துள்ளார்.

அப்போது அவர் வைத்திருந்த கைப்பையைத் திறந்து செல்போனை எடுத்துப் பேசியுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர், பைக்குள் வைத்திருந்த நகைகள் இருந்த பர்ஸைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதனை அறியாத பஞ்சவர்ணம், திருச்செந்தூரில் பேருந்திலிருந்து இறங்கி, அங்கிருந்து ரயில் மூலம் மதுரைக்குச் சென்றுள்ளார். திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் மதுரை இறங்குவதற்காகத் தயாரானபோது, கைப்பையிலிருந்த நகைப் பர்ஸ் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உடனடியாக மதுரை ரயில் நிலைய போலீசாரிடம் அவர் புகார் அளித்தார். ஆனால் விசாரணையில், நகைகள் குலசேகரன்பட்டினம் பகுதியில் அரசுப் பேருந்தில் பயணித்தபோதே திருடப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் அளித்த புகாரின் பேரில், குலசேகரன்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் சோனியா வழக்குப்பதிவு செய்து, நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

error: Content is protected !!