Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி டாக்டர் எம்.ஏ. அலீமுக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருது!

திருச்சி: அறிவியல் தமிழ் எழுத்தாளரும், திருக்குறள் ஆய்வாளரும், பிரபல மூளை நரம்பியல் நிபுணருமான பேராசிரியர் டாக்டர் எம்.ஏ. அலீமுக்கு தமிழக அரசின் ‘தமிழ்ச் செம்மல்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், அறிவியல் தமிழ் மற்றும் திருக்குறள் ஆய்வுக்கும் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வரும் நவம்பர் 1ஆம் தேதி அவருக்கு ‘தமிழ்ச் செம்மல்’ விருது வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் எம்.ஏ. அலீம், மருத்துவத் துறையுடன் தமிழ் இலக்கியம் மற்றும் திருக்குறள் ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார்.

தமிழக அரசின் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், தமிழக அரசுக்கும் தமிழ் வளர்ச்சித் துறைக்கும் தனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!