Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காவல்துறை மீது திமுக பரந்தாமன் குற்றச்சாட்டு!

காவல்துறை மீது திமுக பரந்தாமன் குற்றச்சாட்டு!

திமுகவினர் அளிக்கும் புகார்களைக் கிடப்பில் போட்டுவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தினர் அளிக்கும் புகார்களுக்கு மட்டும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் காவல்துறை மற்றும் சைபர் கிரைம் பிரிவின் செயல்பாடுகள் குறித்து திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் தவறாகச் சித்தரித்ததாகக் கூறப்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

திமுகவினர் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வதாகவும், அதேநேரத்தில் தவெகவினர் அளிக்கும் புகார்களுக்கு மட்டும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தமிழக சைபர் கிரைம் காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும், தவெகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவைப் போன்று செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுகவினரின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் பரந்தாமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து பரந்தாமன் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.

error: Content is protected !!