ஜப்பானின் ஷிமா நகரில் இருந்து தென்கிழக்கே 58 கி.மீ. தொலைவில் இன்று (நவம்பர் 1) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது. கடலோரப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
