Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரையில் ரவுடி குட்டிசாக்கு முகம் சிதைத்து வெட்டிக் கொலை

மதுரையில் ரவுடி குட்டிசாக்கு முகம் சிதைத்து வெட்டிக் கொலை

மதுரை சமயநல்லூர் அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய ஊராட்சி மன்றக் கட்டடத்தில், ரவுடி குட்டிசாக்கு என்ற சூர்யா நேற்று (நவ.1) மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், அவரை ஓட ஓட விரட்டிச் சென்று முகத்தில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. சூர்யா மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்விரோதம் காரணமாக பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததா என சமயநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!