தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை நடத்துவதற்குப் புதிய விதிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே பார்கள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் வளாகங்களிலும் பார்கள் அமைக்க அனுமதியில்லை. 21 வயதுக்குட்பட்டவர்களை பார்களுக்குள் அனுமதிக்கக் கூடாது. பார் அமைவிடத்துக்கு டாஸ்மாக் மேலாண் இயக்குநரின் ஒப்புதல் பெறுவது கட்டாயம். மேலும், தனியார் ஒப்பந்தப்புள்ளி மூலம் பார்களை நடத்த அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்
