Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை–மாமல்லபுரம்–புதுச்சேரி இடையே படகு சேவை துவங்க திட்டம்!

சென்னை–மாமல்லபுரம்–புதுச்சேரி இடையே படகு சேவை துவங்க திட்டம்!

சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்கு படகு சேவையை தொடங்க

தமிழ்நாடு கடல்சார் வாரியம் திட்டமிட்டுள்ளது. படகு சேவையை இயக்க தனியார் படகு சேவை நிறுவனங்களிடம் இருந்து விருப்பம் கோரப்பட்டுள்ளது. விரைவில் சென்னை – புதுச்சேரி இடையே கடல் வழி பயணம் சாத்தியமாகும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் (TNMB) வாயிலாக, சென்னை, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களை இணைக்கும் வகையில், கடற்கரை நீர்வழிகள் வழியாக பயணிகள் படகுச் சேவைகளை (Passenger Ferry Services) இயக்க ஆர்வமுள்ள, அனுபவம் வாய்ந்த மற்றும் நிதி வசதி கொண்ட படகு உரிமையாளர்கள், இயக்குபவர்கள், முகமைகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து ‘ஆர்வ வெளிப்பாட்டு விண்ணப்பங்களை’ (Expression of Interest – EOI) வரவேற்கிறது.

இந்த முன்முயற்சியானது, சென்னை, மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி இடையே பயணிகள் படகுச் சேவையை ஏற்படுத்துதல், கடற்கரைச் சுற்றுலாவை ஊக்குவித்தல், பயணிகளுக்கு மாற்றுப் போக்குவரத்து வசதியை வழங்குதல் மற்றும் ஒருங்கிணைந்த கடற்கரைச் சுற்றுலாச் சுழற்சியை (Coastal Tourism Circuit) உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில், சுற்றுலா அல்லது பொழுதுபோக்கு சார்ந்த பயணிகள் படகுச் சேவைகளை இயக்குவதில் அனுபவம் கொண்ட தகுதியான படகு உரிமையாளர்கள்/இயக்குபவர்களிடமிருந்து ‘ஆர்வ வெளிப்பாட்டு விண்ணப்பங்களை’ (EOI) தமிழ்நாடு கடல்சார் வாரியம் (TNMB) கோருகிறது. EOI ஆவணத்தை https://tntenders.gov.in/nicgep/app என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், தங்கள் ‘ஆர்வ வெளிப்பாட்டு விண்ணப்பங்களை’ (EOI), அதனுடன் இணைக்கப்பட வேண்டிய விவரங்களுடன் 01.12.2026 அன்று காலை 11:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!