சீனாவை சேர்ந்த சியோ சியோ சு என்ற பெற்றோர் இல்லாத இளைஞர், தனது திருமணத்தை நடத்த உதவுமாறு இணையவழியில் விடுத்த வேண்டுகோளை ஏற்று அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து திருமணத்தை நடத்தியுள்ளனர். மணமக்களுக்கு முற்றிலும் அறிமுகமில்லாத பொதுமக்கள் பலரும் நேரில் வந்து சமைப்பது, அலங்காரம் செய்வது, உணவுகள் வழங்குவது என திருமணத்தின் அனைத்து வேலைகளையும் தாங்களாகவே முன்வந்து பகிர்ந்துகொண்டனர். இச்சம்பவம் அனைவரின் நெஞ்சத்தையும் நெகிழ செய்துள்ளது.
வாலிபரின் திருமணத்தை முன்வந்து நடத்திய பொதுமக்கள்- நெகிழ்ச்சி
