முரசு’ புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு, கோயம்புத்தூர், கடலூர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, நீலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
