Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் இருந்து சென்னை செல்ல இருந்த 2 விமான சேவைகள் ரத்து

சென்னை ஏர்போட்டில் 11 விமானங்கள் ரத்து

திருச்சியில் இருந்து சென்னை செல்ல இருந்த 2 விமான சேவைகள் ரத்து

மேலும் 9 விமான சேவை இன்று நிறுத்தி வைப்பு

திருச்சி நவ 2 –

வங்கக் கடலில் உருவான ‘முரசு’ புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் இன்று நள்ளிரவு ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து புறப்படவிருந்த 5 விமானங்களும், சென்னைக்கு வரவிருந்த 6 விமானங்களும் என மொத்தம் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து திருச்சி, கடப்பா, ராஜமுந்திரி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படவிருந்த விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விமானப் பயணிகள் தங்களது பயணம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.இதனால் இன்று வெளியூர் செல்ல இருந்த விமானிகள் அவதிப்பட்டனர்.

error: Content is protected !!