கரூரில் சீட்டு நடத்துவதாகக் கூறி 41 பேரிடம் ரூ.53 லட்சம் பணம் வசூல்மோசடி செய்து, பணத்தைத் திருப்பித் தராத சீட்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் மனு.
கரூர் மாவட்ட கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சீட்டு நடத்துவதாக கூறி தனியா நிறுவனம் 40க்கும் மேற்பட்ட நபர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு முழுமையாக

கட்டிய பிறகு தராமல் கொலை மிரட்டல் விடுவதாக கூறி பாதிக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் மனு.
மனுவில் கூறியுள்ளதாவது, பாளையம் பகுதியில் SJV சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார்

சீட்டு நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் சீட்டு நிறுவனத்துடன் தொடர்பில் இருந்ததாகவும், தொடர்ந்து பல்வேறு நபர்களிடம் சீட்டு சேர்த்து பணம் வசூலித்ததாகவும் புகார்தாரர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, 50 ஆயிரம், ஒரு லட்சம், இரண்டு லட்சம், ஐந்து லட்சம் எனப் பல்வேறு தொகைகளில் சீட்டுகள் நடத்தப்பட்டதாகவும், 200-க்கும் மேற்பட்ட நபர்கள் நிறுவனத்தின் சீட்டில் சேர்க்கப்பட்டதாகவும்.
ஆனால், சீட்டு முதிர்வடைந்த பிறகும் வாடிக்கையாளர்களுக்கு உரிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும்.
இதற்கிடையே, பணம் கேட்ட வாடிக்கையாளர்களை அலைக்கழித்ததுடன், தொடர்ந்து பணம் வழங்குவதாகக் கூறி ஏமாற்றி வருகின்றனர்.
மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர்கள் சுரேஷ், காளிதாஸ், வடிவேல் ஆகியோர் மீது உரிய விசாரணை நடத்தி, பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சீட்டு நிறுவனத்தை வேறு இடத்திற்கு மாற்றி அங்கேயும் சீட்டு பணம் வசூல் செய்து வருவதாகவும் அங்கு சென்று கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறினார்.
