திருப்பத்தூரில் கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மதுபானங்களுக்கு எதிரான அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பத்தூரில் காவல்துறை சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மதுபானங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு காவல்துறையின் அமலாக்கப் பணியகம் குற்றப்புலனாய்வுத்துறை மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் காவல்துறை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மதுபானங்களைத் தவிர்த்து, உடல்நலத்தையும் குடும்ப நலத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் காவல் துணை கண்காணிப்பாளர்சாந்தமூர்த்தி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் பாபு
காவல் உதவி ஆய்வாளர் மஞ்சுநாதன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
