தஞ்சை ஆவின் பால் பண்ணையில் “கிரீன் மேஜிக் பிளஸ்” புதிய வகை பால் அறிமுகம்.
தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் தஞ்சாவூர், திருவாருர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்களை நியாயமான விலையில் தொடர்ந்து வழங்கி வருகிறது. மேலும்,

பொது மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் “கிரீன் மேஜிக் பிளஸ்” (Green Magic Plus ) என்ற புதிய வகை பால் (500 மி.லி. Rs.28-, 200 மி.லி Rs.12 ) இன்று அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சை நாஞ்சிகோட்டை சாலை ஆவின் பால்பண்ணையில் நடந்த நிகழ்ச்சியில் இந்த புதிய வகை கிரீன் மேஜிக் பிளஸ் பாலை மாவட்ட ஆட்சியர் ரேவதி, விஜய் சரவணன் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
