கும்பகோணம் அருகே முப்பக்கோவில் என்ற இடத்தில் அனுமதி இன்றி தீபாவளி பண்டிகைக்காக நாட்டு வெடிகள் தயாரித்த விஜய பாண்டியன் என்பவர் கைது.
இவரிடமிருந்து 20 மூட்டைகள் உதிரி வெடிகள் பறிமுதல் . கும்பகோணம் நகர கிழக்கு காவல் நிலையத்தார் விசாரணை.
கும்பகோணம் அருகே மூப்பக் கோவில் என்ற இடத்தில் அனுமதியின்றி தீபாவளி பண்டிகைக்காக வெடிகள் தயாரிப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, நேற்று மாலை மூப்பக்கோவில் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மூப்பக்கோவில் மேலதெருவில் அனுமதி இன்றி தீபாவளி பண்டிகைக்காக நாட்டு வெடிகள் தயாரித்த விஜயபாண்டியனை காவல்துறையினர் கைது செய்தனர் .
தீபாவளி பண்டிகைக்காக விற்பனைக்காக தயார் செய்து வைத்திருந்த 20 மூட்டைகள் உதிரி வெடிகள் இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
