சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடிகர் தனுஷின் ’ஓம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை முன்னிட்டு, தனுஷ் நற்பணி இயக்க நிர்வாகிகள் விழா நடைபெறும் இடத்திற்கு செல்லும் வழி நெடுகிலும் பேனர்களை வைத்துள்ளனர். அந்த பேனர்களில் “எங்கள் இயக்கத்தின் முதல்வரே” போன்ற அரசியல் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இன்றைய விழாவில் அரசியல் குறித்து தனுஷ் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
“எங்கள் இயக்கத்தின் முதல்வரே” – தனுஷ் ரசிகர்கள் பேனர்
