Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னை ஓஎம்ஆர் சாலை சேதம் – கழிவுநீர் தேக்கத்தால் கடும் அவதி!

சென்னை ஓஎம்ஆர் சாலை சேதம் – கழிவுநீர் தேக்கத்தால் கடும் அவதி!

சென்னை, ஓஎம்ஆர் சாலையில் சிதிலமடைந்த சாலைகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது சிறு மழைக்கே குளம் போல் தேங்கும் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சென்னையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சென்னை ஓஎம்ஆர் சாலை மற்றும் ஈ.சி.ஆர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

ஓஎம்ஆர் சாலையில் மெட்ரோ பணி உள்ளிட்ட காரணங்களால் சாலைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது.

இதனால் சிறு மழை பெய்தாலே மழைநீர் சாலையில் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்கிறது.

மேலும் மழைநீரோடு கழிவுநீரும் கலந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஓஎம்ஆர் சாலை முழுவதும் இது போன்று சாலைகள் சிதிலமடைந்து காணப்படுவதால், சாலையில் உள்ள பள்ளங்கள் தண்ணீரில் மறைந்து விடுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் பள்ளங்களை கவனிக்காமல் சென்று விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

எனவே உடனடியாக தற்காலிக சாலைகள் அமைத்து தருமாறும், சிதிலமடைந்த சாலைகளை சீரமைக்குமாறும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!