சென்னை காசிமேடு பகுதியில் 12 வயதுடைய 3 சிறுவர்களை பட்டாசு வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்ற விக்ரம் என்ற இளைஞர், அவர்களுக்கு வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சிகரெட்டால் சிறுவர்களின் உடலில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் விசாரணை நடத்தி, விக்ரம் என்ற இளைஞரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சிறுவர்களுக்கு சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை.. இளைஞர் கைது
