தீபாவளி என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசு தான் பட்டாசு வெடிக்காத குழந்தைகளே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு பட்டாசு குழந்தையுடன் ஒன்றே போகி விட்டது.இன்னும் சில பேர் பெரியவர்களாக மாறிய பிறகும் கூட பட்டாசு வெடிப்பது வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.இந்நிலையில் பட்டாசை வெடிக்கும் போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தீயணைப்புத்துறையினர் போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர். குறிப்பாக
பட்டாசுகளை சமையலறை அடுப்புகள் அல்லது எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கு அருகில் ஒருபோதும் சேமித்து வைக்கக்கூடாது. பட்டாசுகளை வெடிக்கும்போது ஓடுவதையும் விளையாடுவதையும் தவிர்க்க வேண்டும்.
தீக்காயங்கள் ஏற்பட்டால் உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம்.
யாருக்கேனும் தற்செயலாகத் தீக்காயம் ஏற்பட்டால், அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளித்து, தாமதமின்றி அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருச்சிராப்பள்ளி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் லட்சுமிபாய் அறிவுறுத்தியுள்ளார்.இந்நிலையில் திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனையில்தீக்காயங்களுக்கான முதலுதவி மற்றும் அனைத்து வகையான தீக்காயங்களுக்கும் சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை மருத்துவமனை முதல்வர் டாக்டர் குமரவேல் செய்துள்ளார் மேலும் 20 படுக்கையில் கொண்ட தனி தீக்காய சிகிச்சை பிரிவு தயார் நிலையில் உள்ளது.எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் பட்டாசுகளை வெடிக்குமாறு திருச்ச அரசு மருத்துவமனைடாக்டர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
