கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள அடரி கிராமத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் சூர்யா சில இளைஞர்களால் கத்தியால் கொடூரமாகக் குத்தப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த மாணவன் சூர்யா சிகிச்சைக்காகக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வெறிச்செயலை அரங்கேற்றிவிட்டுத் தப்பியோடிய மர்ம நபர்களைச் சிறுபாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடலூரில் 11ம் வகுப்பு மாணவனுக்கு கத்திக்குத்து..
