திருச்சி கே.கே.நகர்
உடையாம்பட்டி, பகுதியை சேர்ந்த முத்துகுமார் என்பவரது மகன் தேவேந்திரன் (வயது 23)என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரர் கில்லி பாலமுருகன் என்பவர் தவெக கட்சியின் 60வது வார்டு நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில்
கடந்த 8 ஆம் தேதி . தேவேந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடிப்பதற்காக பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த காஜாமமலை காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜகன் (வயது 34) என்பவர் தேவேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஏற்கெனவே நிலப்பிரச்சினை குறித்த பேஸ்புக் பதிவு ஒன்றை, தவெக நிர்வாகியான பாலமுருகன் (எ) கில்லி பாலா ‘லைக்’ செய்திருந்ததை மையமாகக் கொண்டு, ஜகன் தேவேந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும், கையாலும் மரக்கட்டையாலும் அவரை தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் தேவேந்திரனுக்கு முகத்தில் காயமும், இடது பக்கத்தில் வீக்கமும் ஏற்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட ஜகன் என்பவரை கைது செய்தனர்.
