நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70 அடியையும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 67.61 அடியையும் எட்டியுள்ள நிலையில், அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் அருவியை பார்வையிட மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு – குளிக்கத் தடை!
