Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அத்தனைக்கும் விஜய் அல்லவா பொறுப்பு’- நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு

அத்தனைக்கும் விஜய் அல்லவா பொறுப்பு’- நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு

தமிழகத்தில் தவெக எம்எல்ஏக்கள் மீது பகீர் குற்றச்சாட்டுகள் அணிவகுக்கும் நிலையில் அத்தனைக்கும் விஜய்தான் பொறுப்பு என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

பிரச்சாரத்தில் விஜய் சொன்னார்- “திருச்சி வேட்பாளர் விஜய் , மதுரை கிழக்கு விஜய் ! எல்லா தொகுதியிலும் உங்கள் விஜய்க்கு வாக்களியுங்கள் ! ” என்றாரல்லவா?

அப்போ அவர்தான் பொறுப்பு. அவருடைய MLAக்கள் மேல் பகீர் குற்றச்சாட்டுக்கள் அணிவகுத்து வருகின்றன. அத்தனைக்கும் விஜய் அல்லவா பொறுப்பு. ஆதவ் அர்ஜுனாவும் ராஜ்மோகனும் பேசுவதை கேட்பதற்கா மக்கள் விசிலுக்கு போட்டார்கள்? அவர்கள் என்ன விஜய்க்கு டப்பிங் வாய்ஸ் ஆ ?

எந்த பிரச்சினைனாலும் முதமைச்சர் கண்டுக்கவே மாட்டாரு, அவரு பாட்டுக்கு கல்யாணம் கார் ரேஸுன்னு ஜோடியா சுத்துவாரு… ன்னு மக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள். கவனம் விஜய் சார் ! என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!