கிழக்கு தாம்பரம் இளங்கோவன் தெருவில் ஒருவர் தனது காரை பல நாட்களாக நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் காரில் இருந்த பேட்டரியின் மின்சாரம் தீர்ந்து காரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காரின் உரிமையாளர் புதிய பேட்டரி வாங்கி வந்து காரில் பொருத்தி அரை கிமீ தூரம் ஓட்டி சென்றுள்ளார்.
பின்னர், காரை நிறுத்திய சில நிமிடங்களில் காரில் இருந்து திடீரென புகை வெளியேறி, மளமளவென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. கார் உரிமையாளர் உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியுடன் தீயை அணைக்க போராடினார். தீ வேகமாக பரவி கார் முழுவதும் எரிந்தது. அதிர்ஷ்ட வசமாக உயிர்சேதமோ, யாருக்கும் காயமோ இல்லை.
