Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மலைக்கோட்டையில் அம்பாள் தேர் வெள்ளோட்டம்!

திருச்சி மலைக்கோட்டையில் அம்பாள் தேர் வெள்ளோட்டம்!

திருச்சி மலைக்கோட்டையில் ரூ 58.7 லட்சம் செலவில் செய்யப்பட்ட அம்பாள்
புதிய திருத்தேர் வெள்ளோட்டம் இன்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி மாநகரின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கும் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் மற்றும் தாயுமானவர் சுவாமி திருக்கோயில்களுக்காகப் புதிதாக மரத் தேர்செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் இந்து அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர் அதன்படி ரூ 58.7லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்டது இந்த தேர் 13 அடி அகலமும் 29 அடி உயரமும் கொண்டது பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரைச் சேர்ந்த பாரம்பரிய மர சிற்ப கலைஞர்கள் இந்த தேரை உருவாக்கியுள்ளனர். இந்த அம்பாள் புதிய தேரின் வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்றது.கோவில் வளாகத்திற்கு வெளியே என்எஸ்பி சாலையில் புதிய தேர் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று என்.எஸ்.பி ரோடு ,நந்தி கோயில் தெரு சின்ன கடை வீதி முழுவதும் புதிய தேர் சென்று சுற்றி வலம் வந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாரம்பரிய மரச்சிற்பக் கலை நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய திருத்தேர், பக்தர்களிடையே வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!