கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கல்லூரி மாணவி அமிர்தா கிருஷ்ணன் (17), கேரளாவை சேர்ந்த தனது காதலன் அர்ஜுன் 5 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியில் மனமுடைந்து வீட்டின் படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மாலை நேரத்தில் டியூசனுக்கு வந்த மாணவர்கள், அமிர்தா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றித் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காதலன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
