Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூரில் சூர்யா ரசிகர் மன்றத்தின் 25ம் ஆண்டு விழா கொண்டாட்டம்!

கரூரில் சூர்யா ரசிகர் மன்றத்தின் 25ம் ஆண்டு விழா கொண்டாட்டம்!

கரூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றத்திற்கு 25 ஆண்டுகள் நிறைவு – கலையரங்கம் திரையரங்கம் முன்பு கேக் வெட்டி, பூசணிக்காய் உடைத்து ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் கரூர் மாவட்டத்தில் இரண்டு திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள்

உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல், கரூர் மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இந்த இரட்டை மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் கரூர் கலையரங்கம் திரையரங்கம் முன்பு சிறப்பு கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர் மாவட்ட பொறுப்பாளர் PM. பழனிசாமி மற்றும் லிபின் வசந்த் ஆகியோர் தலைமையில்

நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட தலைமை நிர்வாகிகள் E. திவாகர், S. அருண், V. தீபக், M. பாலசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், நடிகர் சூர்யாவின் பிளக்ஸ் பேனர் முன்பாக கேக் வெட்டி, பூசணிக்காய் உடைத்து ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து சரவெடி மற்றும் வாணவேடிக்கை வெடித்தும் உற்சாகமாகக் கொண்டாடினர்.

மேலும் மரக்கன்றுகள் வழங்குதல், ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கரூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றத்தின் 25 ஆண்டுகால பயணத்தையும், தீபாவளி திரைப்பட வெளியீட்டையும் ஒருசேரக் கொண்டாடிய ரசிகர்களின் உற்சாகத்தால் கலையரங்கம் திரையரங்கம் முன்பு விழாக்கோலம் பூண்டது.

error: Content is protected !!