Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.1.50 கோடி கொள்ளை…பரபரப்பு

டாஸ்மாக் ஊழியரை தாக்கி ரூ.1.50 கோடி கொள்ளை...பரபரப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே டாஸ்மாக் வசூல் பணம் ரூ.1.50 கோடியை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் வசூலான ரூ.1.50 கோடி பணத்துடன் ஊழியர்கள் இருவர் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரகடம் அருகே காரை வழிமறித்த மர்ம நபர்கள், இரு ஊழியர்களையும் சரமாரியாகத் தாக்கிவிட்டு பணத்துடன் காரைக் கடத்திச் சென்றனர்.

பின்னர், சம்பவ இடத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் காரை விட்டுவிட்டு, அதிலிருந்த ரூ.1.50 கோடி பணத்துடன் மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் 5 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் வசூல் பணம் கொண்டு சென்ற ஊழியர்களைத் தாக்கி ரூ.1.50 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!