கொல்கத்தாவில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா விமானத்தைக் கடத்தப்போவதாக மிரட்டல் கடிதம் கிடைத்ததை அடுத்து, அந்த விமானம் புறப்படாமல் நிறுத்தப்பட்டது.
கொல்கத்தா விமான நிலையத்தில் மும்பை நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானம் தயாராக இருந்தது. 93 பயணிகள், 5 ஊழியர்கள் பயணிக்க இருந்தனர். விமான கழிவறையில், விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்து எழுதப்பட்ட பேப்பரை விமான ஊழியர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விமானம் உடனடியாக விமான நிலையத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டது. இந்த விமானத்தில் சுமார் 93 பயணிகளும் 5 விமானப் பணியாளர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கி விடப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் சிறப்பு விமான நிலைய பாதுகாப்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் விரைந்து வந்து விமானத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
