திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா, கருப்பூர் ஊராட்சி, காரைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் துரைமுருகன்
வயது 36 , இவர் சிஎன்சி ஆப்பரேட்டராக தனியார் நிறுவனத்தில் மலேசியாவில் கடந்த நான்கரை வருடமாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர் கடந்த தீபாவளி அன்று விடுமுறை நாள் என்பதால் நண்பர்களுடன் பெர்தாக் என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அவ்வாறு சென்றபோது எதிர்பாராத விதமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா சென்றவர்கள் 5 க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மணப்பாறையை சேர்ந்த துரைமுருகன் என்பவர் நீரில் அடித்து செல்லப்பட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என எந்த தகவலும் தெரியவில்லை, எனவே எனது கணவனை மீட்டுக் கொடுக்க வேண்டும் என அவரது மனைவி சங்கீதா இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது உறவினர்களுடன் மனு அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சங்கீதா கூறுகையில் :
கடந்த தீபாவளி அன்று காலை 9:30 மணி அளவில் தான் தொலைபேசியில் பேசியதாகவும் இன்று விடுமுறை நாள் என்பதால் நான் எனது நண்பர்களுடன் சுற்றுலா செல்வதாக தனது கணவர் கூறியதாகவும், சுற்றுலா சென்ற கணவரை மீண்டும் தொடர்பு கொள்ள இயலவில்லை, உடன் சென்றவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 8 க்கும் மேற்பட்டோர் அடித்து சொல்லப்பட்டதாகவும் துரைமுருகன் என்ன ஆனார் என எங்களுக்கு தெரியாது என கூறியதாக கண்ணீர் மல்க கூறினார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தனது கணவர் மீட்டு தர வேண்டும் என தெரிவித்தார்.
