Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மதுரை தனிஷ்க்’ ஜுவல்லரியில் 500 பவுன் நகை கொள்ளை – பரபரப்பு

மதுரை காளவாசல் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

காளவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் தனிஷ்க் நகைக்கடைக்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் பின்பக்க வழியாக நுழைந்ததாகக் கூறப்படுகிறது.

கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த தங்க நகைகளை அள்ளிச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 500 சவரன் நகைகள் கொள்ளைபோனதாகக் கூறப்படும் நிலையில், கொள்ளைபோன நகைகளின் துல்லியமான அளவு குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

புதிதாக திறக்கப்பட்ட நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக வெளியான தகவல் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!