Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வானகரம் அருகே பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு

வானகரம் அருகே பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு

வாகனத்தின் சாவி பறிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவருக்கு வெட்டுக்காயம்

சென்னை நூம்பல், எம்.ஜி.ஆர். சாலை அருகே வாகனத்தின் சாவியைப் பறிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 12ஆம் வகுப்பு மாணவர் அபிஷேக் (18) அரிவாளால் வெட்டப்பட்டார்.

போரூர் அரசு பள்ளியில் படித்து வரும் அபிஷேக்கிற்கும், அவரது நண்பரான ஷியாம் (21) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஷியாம் கத்தியால் தாக்கியதில் அபிஷேக்கின் கையில் காயம் ஏற்பட்டது.

பின்னர் ஷியாமின் வீட்டிற்குச் சென்று தகராறு செய்தபோது, அங்கு வந்த அவரது உறவினர் ராஜா தாக்கியுள்ளார். அப்போது பின்னால் இருந்து ஷியாம், அபிஷேக்கின் பின்தலையில் வெட்டியுள்ளார்.

ரத்தக் காயங்களுடன் வானகரம் காவல் நிலையத்திற்கு வந்த மாணவரை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வானகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!