சென்னை: தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொடர்ந்து 3வது நாளாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காவல்துறை டிஜிபி, தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற கொலை, வன்முறை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களின் பின்னணியில் சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்பது, குற்றங்களைத் தடுப்பது மற்றும் காவல்துறை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் முதல்வர் விஜய் உயர் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது 3வது நாளாக ஆலோசனை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
