தமிழகத்தில் பண்டிகை நாட்களிலும், அதற்கு முந்தைய நாட்களிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பண்டிகைக் காலங்களில் ஏற்படும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள், மோதல்கள் மற்றும் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது தமிழகத்தில் ஆண்டுக்கு 8 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பொங்கல், தீபாவளி உள்ளிட்ட முக்கியப் பண்டிகை நாட்களிலும், அதற்கு முந்தைய நாட்களிலும் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
