திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியில் நேற்றிரவு 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த அம்மிக்கல் விற்கும் தொழிலாளி கைது செய்யப்பட்டார். கைதான விஷ்ணு (26) தப்பிச்செல்ல முயன்ற போது காலில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
12 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம்.. தொழிலாளி கைது
