Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேலம் கலெக்டர் அலுவலக லிப்டில் சிக்கிய 4 ஊழியர்கள் மீட்பு!

சேலம் கலெக்டர் அலுவலக லிப்டில் சிக்கிய 4 ஊழியர்கள் மீட்பு!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக, லிப்டில் பயணம் செய்த 4 அரசு ஊழியர்கள் அரை மணி நேரத்திற்கும் மேலாக உள்ளேயே சிக்கித் தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் நான்கு அடுக்குகளைக் கொண்ட கட்டிடமாகும். இங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட 40-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அரசு ஊழியர்கள் ஒவ்வொரு தளத்திற்கும் செல்வதற்காக நான்கு இடங்களில் லிப்ட் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இன்று நான்கு அரசு ஊழியர்கள் லிப்ட் மூலம் மூன்றாவது மற்றும் நான்காவது மாடிகளுக்குச் சென்று கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் லிப்ட் பாதியிலேயே நின்ற நிலையில், அதில் பயணம் செய்த இரண்டு பெண் ஊழியர்கள் மற்றும் இரண்டு ஆண் ஊழியர்கள் என மொத்தம் நான்கு பேரும் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து, அரை மணி நேரத்திற்கும் மேலாக லிப்டிற்குள் சிக்கித் தவித்த அவர்கள், வெளியே வர முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவலறிந்த அலுவலகத்தில் இருந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டதை அடுத்து, லிப்டில் சிக்கியிருந்த நான்கு பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதில், முதியவர் ஒருவர் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக நான்கு அரசு ஊழியர்கள் அரை மணி நேரத்திற்கும் மேலாக லிப்டிற்குள் சிக்கித் தவித்த சம்பவம் அங்கிருந்த ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!