சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் – எம்.எல்.ஏ ஈ.சி.ஆர். சரவணன் திறந்து வைத்தார்
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கடந்த செப்டம்பர் மாதம் இந்த அரசு பள்ளிக்கு

ஆய்வுக்கு வந்த பொழுது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் குடிநீர் சுத்தமாக இல்லை என்று கோரிக்கை வைத்தனர்.
அதை உடனடியாக தீர்க்கும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் ஈ.சி.ஆர். சரவணன் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் 7.80 லட்சம் மதிப்பீட்டில் மாணவ, மாணவியர்களுக்கு

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை தயார் செய்து கொடுத்து இன்று மாணவ மாணவிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
கோரிக்கை வைத்த மாணவ, மாணவிகள் எம்.எல்.ஏ-வுக்கு நன்றி தெரிவித்தனர்.
அப்போது மாணவர்களிடம் பேசிய எம்.எல்.ஏ,
எந்த ஒரு தவறான பழக்கங்களுக்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள். அனைத்துவித பிரச்சனைகளையும்,தேவைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன்
என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா உள்ளிட்ட கல்வி உபகரண பொருட்கள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாபு, பொருளாளர்,எஸ். ஆர்.உமாபதி,மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
