2026ம் ஆண்டுக்கான ஹெச்எஸ்பிசி – ஹுருன் குளோபல் இந்தியன்ஸ் பட்டியலில் கூகுள் நிறுவனமான ஆல்பபெட் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை முதலிடம் பிடித்துள்ளார். ஆல்பபெட் நிறுவனத்தின் மதிப்பு 4.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா இரண்டாவது இடத்திலும், மைக்ரான் நிறுவனத்தின் சஞ்சய் மெஹ்ரோத்ரா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 236 தலைவர்கள் வழிநடத்தும் 200 நிறுவனங்களின் மொத்த மதிப்பு 15 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
சக்திவாய்ந்த இந்திய வம்சாவளியினர் பட்டியலில் சுந்தர் பிச்சை முதலிடம்!
