Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

யூத் ஒலிம்பிக்; குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 2 தங்கம்: இதுவரை 10 பதக்கம்

யூத் ஒலிம்பிக்; குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 2 தங்கம்: இதுவரை 10 பதக்கம்

ஆப்பிரிக்க நாடான செனகலின் தாகர் நகரில் 4-வது இளையோர் ஒலிம்பிக் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் குத்துச்சண்டையில் ஆடவர் 50 கிலோ எடைப்பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் அம்பேகர் மீதேய் 3-2 என்ற கணக்கில் அயர்லாந்தின் கிறிஸ்டியன் ஜூபானியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். மணிப்பூரைச் சேர்ந்த 17 வயதான அம்பேகர், முதல் சுற்றில் பின்தங்கியிருந்தாலும் அபாரமாக மீண்டு வந்து அயர்லாந்து வீரரை வீழ்த்தினார். இதன் மூலம் இளையோர் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

மகளிர் குத்துச்சண்டையில் இந்தியவின் குஞ்சன் 48 கிலோ எடைப்பிரிவின் பைனலில் அல்ஜீரியாவின் பவுதைனா பென்ச லாவை எதிர்கொண்டார். இதில் ஹரியானாவைச் சேர்ந்த குஞ்சன் மூன்று சுற்றுகளிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 5-0 என்ற கணக்கில் பென்சலாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் யூத் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை படைத்துள்ளார். இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என 10 பதக்கங்களை கைப்பற்றி உள்ளது. இன்றுடன் போட்டி நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று வாள்வீச்சு, கடற்கரை ஹேண்ட்பால் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது.

error: Content is protected !!