Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளித்தலை அருகே கார்-லாரி மோதி விபத்து… தம்பதி படுகாயம்

குளித்தலை அருகே கருப்பத்தூர் பகுதியில் கார் – ஈச்சர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து கணவன் மனைவி படுகாயம். கணவன் காரினுள் சிக்கி ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு படுகாயத்துடன் மீட்பு.

திருப்பூர் பகுதியைச் சேர்ந்த மணிபாரதி – தீபிகா தம்பதியினர், சொந்த வேலை காரணமாக திருச்சி சென்று விட்டு மீண்டும் திருச்சியில் இருந்து கரூர் வழியாக திருப்பூர் சென்று கொண்டிருந்த இருந்தனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கருப்பத்தூர் பகுதியில் திருச்சி கரூர் தேசிய

நெடுஞ்சாலையில் கரூர் நோக்கி கார் வந்து கொண்டிருந்த போது, கரூரிலிருந்து திருச்சி நோக்கி திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஈச்சர் லாரி சென்று கொண்டிருந்தபோது, காரும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் வந்த கணவன் மனைவி படுகாயம் அடைத்தனர்.

அருகில் இருந்தவர்கள காரினுள் சிக்கியிருந்த தீபிகாவை மீட்டனர். மணி பாரதி காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். அருகில் இருந்தவர்கள் கடப்பாரை, கட்டையால் காரை

உடைத்து மணி பாரதியை மீட்டு இருவரையும் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக கரூர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர்.

இதனால் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

error: Content is protected !!