Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தூத்துக்குடி மாவட்டத்தில் 1.71 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கேக்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1.71 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கேக்

தூத்துக்குடி டூவிபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கே.வி. முரளிதரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து மடல்களை வழங்கினர்.தூத்துக்குடி செய்திகள்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து மடல் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து மடல் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1,571 பள்ளிகளில் பயிலும் 1,71,338 மாணவ, மாணவிகளுக்கு கேக் மற்றும் வாழ்த்து மடல்கள் வழங்கப்பட உள்ளன. இதன் தொடக்க விழா இன்று (13.11.2026) தூத்துக்குடி டூவிபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் வேளாண்மை இயக்குநருமான கே.வி. முரளிதரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்குக் கேக் மற்றும் வாழ்த்து மடல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.தூத்துக்குடி செய்திகள்

தொடர்ந்து, டூவிபுரம் மற்றும் சோரீஸ்புரம் அங்கன்வாடி மையங்களுக்குச் சென்ற மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அங்குள்ள குழந்தைகளுக்குச் சர்க்கரைப் பொங்கல் வழங்கினர்.

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாநகராட்சி உதவி ஆணையர் மதனகோபால், மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) சரஸ்வதி, தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!