ஜம்மு காஷ்மீரில் இன்று (நவ.14) அதிகாலை 2:38 மணிக்கு 3.3 ரிக்டர் அளவிலும், காலை 8:48 மணிக்கு தோடா பகுதியில் 3.8 ரிக்டர் அளவிலும் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் பகுதியிலும் இன்று காலை 9:15 மணிக்கு 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் அல்லது பொருட்சேதம் குறித்த எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
மபியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு
